நான்தான்

நான்தான்

Tuesday, January 12, 2010

தை மகளே

புத்தாண்டு வந்ததென்று
புகழ்பாட வந்தாயா
செத்தான் தமிழனென்று
சிரந் தாழ்த்தி வந்தாயா

வித்தாரத் தை மகளே

கொத்து கொத்தாய் மடிந்த இனம்
குலம் தழைத்து வாழ்ந்திடுமா
சொத்து பத்தாய் சேர்த்துவைத்து
சொந்தத்துடன் வாழ்ந்திடுமா மகளே


பித்தானோம்
பிழைப்பிழந்தோம்
இத்தரையில் எங்கேகி
எம் வாழ்க்கை தேடுவது


கொத்து கொத்தாய் மடிந்த இனம்
குலம் தழைத்து வாழ்ந்திடுமா
சொத்து பத்தாய் சேர்த்துவைத்து
சொந்தத்துடன் வாழ்ந்திடுமா