நான்தான்

நான்தான்

Saturday, August 7, 2010

தொடுவானம்

தொட்டு விடும் தூரம்தான்
தொடச் சொல்லும் தொடுவானம்
தொடச் சென்றால் நகர்ந்துவிடும்
தொலைதூரம் தொடுவானம்

கிட்டக் கிட்ட இருப்பது போல்
கானலெனக் கண்காட்டி
எட்ட எட்ட நகர்ந்துவிடும்
எட்டாத தொடுவானம்


அன்னை கொண்ட அன்பும்
அளந்தறியாத் தொடுவானம்
கல்வி என்னும் அறிவும் என்றும்
கற்று முடியாத் தொடுவானம்


முத்து முத்தாய்ச் சொல் கோர்த்த
மொழியும் ஒரு தொடுவானம்
முழுதுணர்ந்த ஞானம் என்பார்

முற்றும் அது தொடுவானம்


தேன்தேடி பூதாவும்
தட்டாம்பூச்சி தொடுவானம்
நான்தேடும் கவிகூட
பலநேரம் தொடுவானம்